திருநாவுக்கரசு நாயனார் புராணம் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாவை மார்பன் என் புதுநலமுண் டிகழ்வானோ.' திருப்பழனத்தைப் பற்றித் தக்கேசிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண் முடியாப் படிமூ வடியால் உலகம் முழுதும் தாவிய நெடியான் நீள்தா மரைமேல் அயனும் தேடிக் காணாத . படியார் பொடியா டகலம் உடையார் பழன நகராரே.” - திருச்சோற்துத் துறை: இது சோழநாட்டில் காவிரி யாற்றின் தென்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் தொலையாச் செல்வ ஈசுவரர், ஒதனவனேசுவரர் என்பவை. அம்பிகையின் திரு. நாமங்கள் ஒப்பிலா அம்பிகை அம்மை, அன்னபூரணி. என்பவை. இது திருக்கண்டியூருக்குத் தென்கிழக்குத் திசை யில் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலம் சப்தஸ்தானத் தலங்களுக்குள் மூன்றாவது தலம். ஒதனவ னேசுவரர் சிவபெருமானுடைய பக்தனாகிய அருளாளன் என்னும் வேதியன் பசியால் வருந்திய போது எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் தன்மையைப் பெற்ற சோற்றை வழங்கியருளிய தலம் இது. இந்திரன் முதலியவர்கள் வழி பட்ட தலம் இது. இந்தத் தலத்துக்குத் தெற்குத் திசையில் சோறுடையான் வாய்க்கால் என்ற பெயரைப் பெற்ற ஒரு கால்வாய் உள்ளது. அன்னம் படைத்த வயல் என்ற ஒரு வயலும் இந்தத் தலத்தில் உண்டு என்று ஆன்றோர் கூறுவர்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
