88 பெரிய புராண விளக்கம்-7 " திருப்புகலூர் அமர்ந்தருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட் டேத்தும் விருப்புடைய உள்ளத்து மேவிஎழும் காதல்புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுதகன்றங் குள்ளம் வைத்துப் பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பதிபிறவும் பணிந்து போந்தார்.” திருப்புகலூர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திரும் புகலூரில், அமர்ந்த்ருளும்-வீற்றிருந்தருளும். சிவபெரு. மான்-சிவபெருமானாகிய அக்கினீசுவரனுடைய, சேவடிகள்செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திரு. வடிகளை. கும்பிட்டு-தம்முடைய திருக்கரங்களைத் தம்மு. டைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டு. ஏத்தும்-அந்த அக்கினிசுவரரைத் துதிக்கும். விருப்புஉடையவிருப்பத்தைப் பெற்ற உள்ளத்து-தம்முடைய திருவுள்ளத் தில். மேவி-உண்டாகி. எழும்-பொங்கி எழும். காதல். காதலை. புரி-செய்யும். வேட்கை-விருப்பம்; செல்ல வேண்டும் என்ற விருப்பம். கூர-மிகுதியாக உண்டாக, ஒருப்படுவார்-அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளத். தீர்மானித்தவராகி; முற்றெச்சம். திருவாரூர்-திருவாரூருக்கு. எழுந்தருளி. ஒ நவாறு-ஒருவகையாக. தொழுது-வன்மீக நாதரை வணங்கிவிட்டு. அகன்று-அந்தத் திருவாரூரைவிட்டு: நீங்கி, அங்கு-அந்தத் திருவாரூரில் உள்ளம்-தம்முடைய திருவுள்ளத்தை. வைத்து-வைத்துவிட்டு. ப்:சந்தி. பொரும் பரையன்-இமயமலை அரசனுடைய புதல்வியும்; ஆகுபெயர். மட-மடப்பத்தைப் பெற்றவளும் ஆகுபெயர். ப்:சந்தி. பாவை-பொம்மையைப் போல என்றும் அழியாத அழகை. உடையவளும் ஆகிய உவம ஆகுபெயர். இடப்பாகர்-பார் வதி தேவியைத் தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய்வித்த சிவபெருமானார்களை. பதி-அவர்கள் திருக்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/94
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
