பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*90. பெரிய புராண விளக்கம்-7 கள் எல்லாவற்றையும் செம்பொற்கற்களாக மாறியிருப் பதைப் பார்த்து, - தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும் சார்பினும் தொண்டர்த் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை பேதரும் சோறும் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலும்ஆம் அம்மை பேசிவ லோகம் ஆள்வதற். கியாதும் ஐயுற வில்லையே.' என்று பாடியருளினார். இந்தத் தலத்துக்கு உரிய தேவாரத்தில், புன்னைப் பொழிபுக லூரண்ணல் செய்வன. கேண்மின்களோ' என்றும், புன்னைத் தாது பொழிற் புகலூரரை' என்று வருவனவற்றால் இந்தத் தலத்தின் விருட்சம் புன்னைமரம் என்பதும், 'கரம் நாலைந்துடைத், தோணற்பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப் புகலூர்க், கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடு வினையே." என்பதனால் சிவபெருமானுடைய திருநாமம் கோணப்பிரான் என்பதும், பெருந்தாழ் சடைமுடி மேற் பிறைசூடிக், கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து' என்று வருவதனால் அம்பிகையின் திருநாமம் க ரு ந் தா ந் குழவி எ ன் ப து ம், வர்த்தமானிச்சுரத்தைப் ப ற் றி வ ஒரு திருப்பதிகத்தில், '.ெ தா ன் டர் த ண் கய ம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும், கொண்டு கொண் டடி பரவிக்குறிப்பறி முருகன் செய் கோலம்” என்று வருவ தனால் முருக நாயனாருடைய திருப்பணியின் சிறப்புப் புலனாகும். இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரச நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - - எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகணி இல்லேன்