இருநாவுக்கரசு நாயனார் புராணம் 91 கழலடியே கை தொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கெ போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே.” இந்தத் திருப்பதிகத்தில் உள் ள இ று தி த் திருத் தாண்டகம் வருமாறு : ' ஒருவனையும் அல்லா துணரா துள்ளம் உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏவக் கருவரை சூழ் காணல் இலங்கை வேந்தன் கடுத்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே. இது அந்த நாயனார் இ ைற வ ன் திருவடிகளைச் சேருவதற்குமுன் பாடியருளியது. இந்தத் தலத்தைப் பற்றி நட்டபாடைப் பண்ணில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: குறிக லந்தஇசை பாடலி னான்நசை யாலிவ் வுலகெல்லாம் நெறிக லந்ததொரு நீர்மைய னாய்எரு தேறிப் பலிபேணி - முறிக லந்ததொரு தோலரை மேலுடை யானிடம் மொய்ம் மலரின் பொறிக லந்த பொழில் சூழ்ந்தய லேபு யல்ஆரும் புகலூரே. ’ அந்த நாயனார் செவ்வழிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/97
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
