பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெரிய புராண விளக்கம்-8 இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திரு நாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: 馨 鱷 கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே, அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: படமுடை அரவினோடு பனிமதி யதனைச்சூடிக் கடமுடை உரிவைமூடிக் கண்டவர் அஞ்சஅம்ம இடமுடைக் கச்சிதன்னுள் ஏகம்பம் மேவினான்றன் நடமுடை ஆடல்காண ஞாலந்தான் உய்ந்தவாறே.’’ அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் 'வருமாறு: ஒதுவித் தாய்முன் அறவரை காட்டி அமணரோடே. காதுவித் தாய்கட்ட நோய்பினி தீர்த்தாய் கலந்தருளிப் போதுவித் தாய்நின் பிணியிழைக் கிற்புளியம் வளாரால் மோதுவிப் பாய் உகப் பாய்முனி வாய்கச்சி ஏகம்பனே. ’’ அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருக்குறுந் தொகை வருமாறு: - பண்டு செய்த பழவினை யின்பயன் கண்டும் கண்டும் களித்திகாண் நெஞ்சமே 黎數