பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 பெரிய புராண விளக்கம்-: பல வகையான வாழை மரங்கள், தமால மரம், கடப்ப மரம், வேப்ப மரம், நெட்டிலிங்க மரம், அசோக மரம் நெல்லி மரம், நாவல் மரம், விளா மரம், வில்வ மரம், அரச மரம், பூவரச மரம், ஆல மரம், மருத மரம் முதலியவை. பானகம்ஆகி.காடாகி. எங்கும்.எந்த இடங்களிலும்; ஒருமை. பன்மை மயக்கம். மனித்தரால்-மனிதர்களால், மனிதர்" என்பது செய்யுளோசையை நோக்கி 'மனித்தர்’ என வந்தது. போகலா-செல்ல முடியாத அலா: இடைக்குறை. நெறி-வழி. அன்றியும்-அல்லாமலும், புரிகின்ற-தம்முடைய திருவுள்ளத்தில்புரிந்தருளுகின்ற. காதல்-விருப்பம்.பொலிந்து எழ.விளங்கி மேல் எழ. ச்சந்தி. சாகம்-தழைகளும் ஒருமை. பன்மை மயக்கம். மூல.வேர்களும்; ஒருமை பன்மை மயக் கம். பலங்கள்-பழங்களும் ஆகிய, துய்ப்பனவும்-உண்ணு' வதற்கு உரியவற்றையும். தவிர்ந்து-விலக்கி விட்டு. தனித்து. -தன்னந்தனியாக நடந்து நேர்-நேராக, இரவும்-இரவு. நேரத்திலும், பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். கயிலை. கயிலாய மலையாகிய, க்:சந்தி. குலக்கிரி.சிறப்பைப் பெற்ற மலையை.எய்துவார்-அடைபவராகி; முற்றெச்சம் ஏகினார்-அந்த நாயனார் எழுந்தருளினார். பிறகு வரும் 355-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு உண்டாகிய நிறைந்த இருட்டில் எழுந்தரு ளும் அந்தத் திருவதிகை வீரட்டானேசுவரருடைய பக்தரா கிய திருநாவுக்கரசு நாயனாரை அடைந்து அவருக்கு முன் னால் கெட்டவையாக உள்ள சிங்கம், புலி, ஓநாய், வேங் கைப் புவி, சிறுத்தை, கழுதைப் புலி,வரிக்கழுதை, ஒட்டைச் சிவிங்கி முதலிய மிருகங்கள் அவருக்கு வலிமையைப் பெற்ற செயலாகிய கொலையைப் புரிவதற்குப் பயப்பட்டன: விடத்தை உமிழும் வாய்களைப் பெற்ற நாகப் பாம்புகள் தங்களுடைய நாக மாணிக்கங்களாகக் கொண்ட படங். களைக் கொண்ட திருவிளக்குக்களை ஏந்திக் கொண்டிருந்: தன; இந்தக் கயிலாய மலைக்கு வந்து தங்களுடைய திரு.