பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருநாவுக்கரசு நாயனார் புராணம் 9இக வடிகள் நிலத்தில் படியுமாறு தேவர்களானாலும் தனியாக வந்து சேர அருமையாக இருக்கும் பாலைவனத்தை அடைந்: தார். பாடல் வருமாறு:

  • ஆய ஆரிரு எளின்கண் ஏகும்.அவ்

வன்பர்தம்மை அணைந்து முன் தீய வாயவி லங்கு வன்தொழில் செய்ய அஞ்சின; நஞ்சுகால் வாய நாக மணிப்பு ணங்கொள்வி ளக்கெ டுத்தன; வந்துகால் தோய வானவ ராயி னுக்தனி துன்னரும்சுரம் முன்னினார்.' ஆய-அவ்வாறு உண்டாகிய, ஆர்-நிறைந்த இருளின் அண்-இரவு நேரத்து இருட்டில், ஏகும்-எழுந்தருளும், அவ். வன்பர் தம்மை-அந்தத் திருவதிகை வீரட்டானேசுவர ருடைய பக்தராகிய திருநாவுக்கரசு நாயனாரை. தம்: அசை: நிலை. அணைந்து-அடைந்து. முன்-அந்த நாயனாருக்கு. முன்னால். தீயவாய-கெட்டவையாக உள்ள. விலங்கு சிங்கம், புலி, ஓநாய், வேங்கைப் புவி, சிறுத்தை, கழுதைப். புவி, வரிக்கழுதை, ஒட்டைச் சிவிங்கி, காண்டாமிருகம் முதலிய மிருகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். வன்-வவி மையைப் பெற்ற,தொழில்-செயலாகிய கொலையை, செய்ய -புரிவதற்கு; வினையாலனையும் பெயர். அஞ்சின-பயப்பட் உன. நஞ்சு-விடத்தை. கால்-உமிழும். வாய-வாய்களைப் பெற்ற, நாகம்-நாகப் பாம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். மணி-தங்களுடைய நாக மாணிக்கங்களாகக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பணம்கொள். படங் களைக் கொண்ட ஒரு மை பன்மை மயக்கம். விளக்கு-திரு. விளக்குக்களை ஒருமை பன்மை மயக் ம். எடுத்தன-ஏந்திக் கொண்டிருந்தன. வந்து-இந்தக் கயிலாய மலைக்கு வந்து. கால்-தங்களுடைய திருவடிகள் : ஒருமை பன்மை மயக்கம்.