பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெரிய புராண விளக்கம்-8 தோய-தரையில் படியுமாறு. வானவராயினும்.தேவர்களா னாலும்; ஒருமை பன்மை மயக்கம். தனி.தனியாக வத்து. துன்னரும்.சேர அருமையாக இருக்கும். சுரம்-பாலை வனத்தை. முன்னினார்-அந்த நாயனார் அடைந்தார். பிறகு உள்ள 356-ஆம் பாடலின் கருத்து வருமாறு : வெம்மையாக இருக்கும் கிரணங்களை வீசும் சூரியன் பிரகாசிக்கும் பகல் நேரத்தில் அந்தப் பாலைவனத்தில் வெப்பமாகிய கிரணங்களை வீசும் அந்தச் சூரியன் கிரணங் கள் பக்கங்களில் பரவியிருந்து எந்த இடங்களிலும் மிகுதி யாக உள்ள மலைகளில் உள்ள குகைகளில் நாகப் பாம்புகளி னுடைய எல்லையில் புகுந்து தீயை எழுப்புகின்றன: பொங்கி எழும் நெருப்பைப் போலச் சுட்டுத் துன்புறுத்தும் பாலை நிலத்தில் வெப்பமான நிழலில் புகுந்த இடத்துக்கு நுழையும் பகலவனாகிய சூரியன் வீசும் சிவப்பான கிரணங்கள் நெருப்பைப் போலச் சுடும் அந்த வடக்குத் திசையில் உறுதியைப் பெற்ற உண்மையாகிய தவம் புரிந்த தவசியாராகிய திருநாவுக்கரசு நாயனார் அடைந்தார்." பாடல் வருமாறு: " வெங்க திர்ப்பகலக்க டத்திடை வெய்ய வன்கதிர் கைபரங் தெங்கும் மிக்கபிளப்பி னாகர்தம் எல்லை புக்கெரி கின்றன பொங்க ழற்றெறு பாலைவெங்கிழல் புக்க சூழல் புகும்பகல் செங்க திர்க்கனல் போலும்அத்திசை திண்மை மெய்த்தவர் கண்ணினார்." வெம்-வெம்மையாக இருக்கும். கதிர்-கிரணங்களை வீசும் சூரியன் பிரகாசிக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பகல்-பகல் நேரத்தில், அக்கடத்திடை-அந்தப் பாலைவனத்தில். வெய்யவன்-வெப்பமாக உள்ள கிரணங் களை வீசும் அந்தச் சூரியன். கதிர்-கிரணங்கள்; ஒருமை