பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 9 வண்டு லாமலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்ட னாய்த் திரி யாய்துகள் தீரவே. ’’ அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருக்குறுந் தொகை வருமாறு: பூமே லானும் பூமகள் கேள்வனும் நாமே தேவர் எனாமை நடுக்குறத் தீமே வும்முரு வாதிரு வேகம்பா ஆமோ அல்லற் படஅடி யோங்களே.' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: " தாயவன் காண் உலகுக்குத் தன்னொப் பில்லாத் தத்துவன் காண் மலைமங்கை பங்கா என்பார் வாயவன் காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணு ளோர்க்கும் சேயவன் காண் நினைவார்க்குச் சித்த மாரத் திருவடியே உள்கிநினைந் தெழுவார் உள்ளம் ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

  • *

அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருத்தாண் டகம் வருமாறு: முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண் மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத் தந்தைகாண் தண்கடமா முகத்தி னார்க்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச் - சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடைஒன்றேறும் எந்தை காண் எழிலாரும் பொழிலார்கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே." இந்தத் தலத்தைப் பற்றித் தக்கேசிப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: f