பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"...i.4 பெரிய புராண விளக்கம்-8 கட்டியிருக்கும் மாலைகளைச் சுற்றித் தொங்க விட்டிருந்த நறுமணம் கமழும் பந்தல்களையும், ஆடி அசையும் துவசங் களையும், தங்களோடு எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தொண்டை நாட்டில் அழகு பெற்றதும் நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்குவதுமாகிய காஞ்சி மாநகரத்தை அந்த மக்கள் அலங்காரங்களைப் புரிந்து வைத்தார்கள். பாடல் வருமாறு: -

  • மாட வீதி மருங்கெல்லாம்

மணிவா யில்களில் தோரணங்கள் நீடு கதலி யுடன்கமுகு நிரைத்து நிறைபொற் குடம்தீபம் தோடு குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் ஆடு கொடியும் உடன் எடுத்தங் கணிள்ே காஞ்சி அலங்களித்தார். மாட-அந்தக் காஞ்சி மாநகரத்தில் வாழும் மக்கள் தாங்கள் வாழும் மாடங்கள்: ஒருமை பன்மை மயக்கம். வீதி-உயரமாக நிற்கும் திருவீதிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-பக்கங்கள்; ஒருமை பன்மை மயக்கம், எல்லாம்-எல்லாவற்றிலும், மணி-அழகைப் பெற்ற, வாயில்களில்-தாங்கள் வாழும் திருமாளிகைகளுக்கு முன்பு உள்ள வாசல்களில், தோரணங்கள்-மாவிலைகள், தென்னங்குருத்தோலைகள், மாலைகள் முதலியவற்றைக் கட்டித் தொங்க விட்ட தோரணங்களையும். நீடு-உயரமாக உள்ள. கதலியுடன்-வாழை மரங்களேர்டு; ஒருமை பன்மை 1. மயக்கம். கமுகு-பாக்கு மரங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். நிரைத்து-வரிசை வரிசையாக நட்டு வைத்து. நிறை:நீர் நிரம் பிய, பொன்-தங்கத்தால் செய்யப் பெற்ற. குடம்-பூரண கும்பத்தையும். தீபம்-திருவிளக்குகளையும்: ஒருமை-பன்மை மயக்கம். தோடு-இதழ்கள்; ஒருமை பன்மை மயக்கம். குலவு-அமைந்துள்ள மலர்-மலர்களைக் க்ட்டி