பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 15

பிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மாலை. மாலைகளை; ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்த-சுற்றித் தொங்கவிட்டி :ருந் த. வாச-நறுமணம் கமழும். ப்: சந்தி. பந்தர்களும்-பந்தல் களையும். ஆடு-காற்றில் அசைந்து ஆடும். கொடியும் துவசங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். உடன்-தங்க ளோடு. எடுத்து-எடுத்துக் கொண்டு வந்து. அங்கு-அந்தத் தொண்டை நாட்டில். அணி-அழகைப் பெற்றதும் ஆகு பெயர். நீள்-நெடுங்காலமாகப் புகழைப் பெற்று விளங்குவது மாகிய, காஞ்சி-காஞ்சி மாநகரத்தை. அலங்கரித்தார்-திரு நாவுக்கரசு நாயனாரை வரவேற்கும் பொருட்டு அந்த மக்கள் அலங்காரங்களைப் புரிந்து வைத்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

பிறகு உள்ள 320-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்தக் காஞ்சி மாநகரத்தில் வாழும் திருத்தொண்டர் கள் கூட்டமாகக் கூடிக் கொண்டு தங்களுடைய நகரமாகிய காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளி வரும் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை எதிர்கொண்டு வரவேற்பதற்காகத் தங்களு டைய திருமாளிகைகளிலிருந்து எழுந்து வந்து இனிய சுவை .யைப் பெற்ற செய்யுட் சொற்களுக்கு அரசராகிய திருநாவுக் கரசு நாயனாரிடத் தில் தாங்கள் தங்கள் திருவுள்ளங்களில் மேற் கொண்ட சைவ வேடத்தின் தோற்றப் பொலிவோடும் அந்தக் காஞ்சீபுரத்தில் மக்கள் நடக்கும் திருவீதிகளில் திருப்பணியைப் புரியும், தேவர்கள் தெரிந்து கொள்வதற்கு அரியவையாக உள்ள திருவலகுகள் முதலாக இருக்கும் அவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இண்டை மலரை அணிந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய திருவதிகை வீரட்டானேசுவரருடைய பக்தராகிய அந்தத் திருநாவு கரசு நாயனாரை எதிர் கொண்டு வரவேற்றார்கள். பாடல் இருமாறு: ' தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக் கரசர்பாற்