பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரிய புராண விளக்கம்-8 திருவிதிக்குள் எழுந்தருளி ஆகாய கங்கையாறு குதித்துக் கொண்டு இறங்கிய சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய ஏகாம்பரேசுவரர் எழுந்தருளியிருக்கும் இவப்பாக விளங்கும் தங்க விமானத்தைப் பெற்ற அந்த ஈசு. வரருடைய திருக்கோயிலை அதிர்ந்து முழங்கும் மேகத்தை. ஒத்த நீலமணியைப் போன்ற திருக்கழுத்தைப் பெற்றவரா கிய திருவதிகை விரட்டானேசுவரர் தடுத்து ஆட் கொண்டதிருநாவுக்கரசு நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: எதிர்கொண் டிறைஞ்சும் சீரடியார் தம்மை இறைஞ்சி எழுந்தருளி மதில்கொண் டணிந்த காஞ்சிநகர் மறுகுட் போந்து வானகதி குதிகொண் டிழிந்த சடைக்கம்பர் செம்பொற் கோயில் குறுகினார் அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றார் ஆண்ட திருகா வுக்கரசர்.” எதிர்கொண்டு.தம்மை எதிர்கொண்டு வரவேற்று' இறைஞ்சும்-தம்மை வணங்கும். சீர்-சீர்த்தியைப் பெற்ற" அடியார் தம்மை-அடியவர்களை; ஒருமை பன்மை மயக்கம். தம்:அசை நிலை. இறைஞ்சி-தாமும் வணங்கிவிட்டு, "தாம் என்றது திருநாவுக்கரசு நாயனாரை. எழுந்தருளி. அப்பால் எழுந்தருளி. மதில்-திருமதிலை. கொண்டு. தனக்குச் சுற்றிலும் பெற்று. அணிந்த-தனக்கு அலங்கார மாகப் புனைந்துள்ள. காஞ்சி நகர்-காஞ்சி மாநகரத்தில். உள்ள. மறுகுள்-ஒரு திருவீதிக்குள். போந்து-தாம் எழுந்: தருளி. வானநதி-ஆகாய கங்கையாறு குதிகொண்டு. குதித்துக்கொண்டு. இழிந்த - இறங்கிய, يَات) ثم{ tمسيس ثاني بن سf{" " பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற. க்: சந்தி. கம்பர்-ஏகாம்பரேசுவரர் எழுந்தருளியிருக்கும். செம்-சிவப் பாக விளங்கும். பொன்-தங்க விமானத்தைப் பெற்ற; ஆகு. பெயர், கோயில்-அந்த ஏகாம்பரேசுவரர் எழுந்தருளி,