பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 19* யிருக்கும் திருக்கோயிலை. அதிர்-அதிர்ந்து முழங்கும், கொண்டலை - மேகத்தை. நேர்-போன்ற, மணி-நீல மணியை ஒத்த மிடற்றார்-திருக்கழுத்தைப் பெற்றவராகிய திருவதிகை வீரட்டானேசுவரர். ஆண்ட-தடுத்து نانی -- கொண்ட, திருநாவுக்கரசர் - திருநாவுக்கரசு நாயனார். குறுகினார்- அடைந்தார். பிறகு வரும் 322-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் ஏகாம்பரேசுவரர்” எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு முன்னால் உயர மாக நிற்கும் கோபுர வாசலில் அந்த நாயனார் தரையில் விழுந்து ஏகாம்பரேசுவரரை வணங்கிவிட்டு பிறகு தரையி விருந்து எழுந்து நின்றுகொண்டு தம்முடைய திரு வருட் செல்வத்தை வழங்கும் ஏகாம்பரேசுவரருடைய திருக் கோயிலினுடைய அழகிய முற்றத்தை அந்த நாயனார் அடைந்து கருப்பதித்தலைப் பெற்ற தங்கத்தை அணிந்த. விமானத்தைப் பெற்ற காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அந்த ஏகாம்பரேசுவரருடைய திருக்கோயிலை அந்த நாய னார் சுற்றி வலமாக எழுந்தருளுபவராகிய அந்த நாயனார். சிவப்பாக இருக்கும் தங்கம் தோன்றும் இமயமலை அரச ணுடைய புதல்வியும், பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய காமாட்சி அம்மை தம்மைக் கட்டித் தழுவிக் கொள்ளக் குழைவை அடைந்த மாணிக்கத்தைப் போன்ற சிவப்பான திருமேனியைப் பெற்ற பெருமையைப் பெற்ற வாழ்வைப் போன்ற ஏகாம்பரேசுவரரை அவருடைய சந்நிதியில் தரிசித்துவிட்டுத் தரையில் விழுந்து அந்த ஈசு வரரை வணங்கிவிட்டுத் தம்மிடமிருந்து ஒரு காலத்திலும் விட்டுப் போகாத பக்தியை அந்த நாயனார் பெருகுமாறு. செய்தருளினார். பாடல் வருமாறு: £ 4 திருவா யிலினைப் பணிக்தெழுந்து செல்வத் திருமுன் றிலை அணைந்து