பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 20 பெரிய புராண விளக்கம்-8 கருவார் கச்சி ஏகம்பர் கனக மணிமா ளிகைசூழ்ந்து வருவார் செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மணிமேனிப் பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார். ’’ திருவாயிலினை. அந்தத் திருநாவுக்கரசு நாயனார் ஏகாம்பரேசுவரர் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுர வாசலில்; உருபு மயக்கம். ப்:சந்தி. பணிந்து-அந்த நாயனார் தரையில் விழுந்து.ஏகாம்பரேசுவரரை வணங்கிவிட்டு, எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. செல்வ-தம் முடைய திருவருட் செல்வத்தை தம்முடைய அடியவர் களுக்கு வழங்கும். த்:சந்தி. திருமுன்றிலை-ஏகாம்பரேசு வரருடைய திருக்கோயில் உள்ள அழகிய முற்றத்தை. அணைந்து-அந்த நாயனார் அடைந்து. கரு-கருப்பதித் தலை: ஆகுபெயர். ஆர்-பெற்ற கச்சி-காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும். ஏகம்பர்-அந்த ஏகாம்பரேசுவரரு டைய, கனகம் அணி-தங்கத்தை அணிந்த. மாளிகை. பெற்ற. சூழ்ந்து-அந்த ஏகாம்பரேசுவரருடைய திருக் கோயிலை அந்த நாயனார் சுற்றி வலமாக, வருவார். எழுந்தருளுபவராகிய அந்த நாயனார். செம்-சிவப்பாக இருக்கும். பொன்-தங்கம் தோன்றும். மலை-இமயமலை அரசனுடைய புதல்வியும்; திணை மயக்கம்; ஆகுபெயர். வல்லி-பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய காமாட்சி யம்மை; உவம ஆகுபெயர். தழுவ-தம்மைக் கட்டித் தழுவிக் கொள்ள. க்:சந்தி. குழைந்த-குழைவை அடைந்த. மணிமாணிக்கத்தைப் போன்ற உவம ஆகுபெயர். மேனி-சிவப் பான திருமேனியைப் பெற்ற, ப்:சந்தி. பெருவாழ்வினை. பெருமையைப் பெற்ற வாழ்வைப் போன்ற ஏகாம்பரேசு வரரை உவம ஆகுபெயர். முன்-அவருடைய சந்நிதியில்