பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 21. கண்டு-தரிசித்து விட்டு இறைஞ்சி-தரையில் விழுந்து அந்த ஈசுவரரை வணங்கிவிட்டு. ப்:சந்தி, பேரா-தம்மிடமிருந்து ஒரு காலத்திலும் விட்டுப் போகாத, அன்பு-பக்தியை. பெருக்கினார்-அந்த நாயனார் பெருகுமாறு செய்தருளி :னர்ர். பிறகு வரும் 323-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தாரை தாரையாக அமைந்து பொழியும் தம்முடைய கண்களிலிருந்து அருவி யைப் போல வழியும் நீர் தம்முடைய திருமேனியில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் உண்டாகும் புளகாங்கிதம் நிறைந்திருந்த தம்முடைய திருமேனிக்கு வெளியிடங்களில் நீர் அலைகளைப் போல வழியப் பக்தியினால் தம்முடைய திருமேனியில் உள்ள எலும்புகளுக்குள் சென்று அலை பாயச் செய்ய தம்மிடம் சேர்ந்துள்ள திருவுள்ளத்தில் திருவிழி களால் பெற்ற பிரயோசனத்தை அந்த நாயனார் அடைந்து ஆனந்தசாகரத்தில் முழுகி இன்பத்தை அடையுமாறு அழகிய ஏகாம்பரேசுவரரைத் தம்மிடம் அமைந்துள்ள திருவுள்ளத் தில் பதியுமாறு வைத்துக் கொண்டு நெடுங்காலமாக விளங் கும் ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருளுபவரா னார். பாடல் வருமாறு: - - " வார்ந்து சொரியும் கண்ணருவி மயிர்க்கால் தோறும் வரும்புணகம் ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப அன்பு கரைந்தென் புள்ளலைப்ப சேர்ந்த கயனப் பயன்பெற்றுத் திளைப்பத் திருவே கம்பர்தமை நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடும் பதிகம் பாடுவார்,' வார்ந்து. அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தாரை தாரையாக அமைந்து. சொரியும்-பொழியும். கண்-தம்மு தி-2 -