பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - பெரிய புராண விளக்கம்-இ. டைய கண்களிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். அருவி. மலையிலிருந்து குதிக்கும் அருவியைப் போல வழியும். நீர்:: உவம ஆகு பெயர். மயிர்க்கால் தோறும்-தம்முடைய திரு. மேனியில் உள்ள ஒவ்வொரு மயிர்க் காலிலும். வரும்-உண் டாகும். புள கம்-புள காங்கிதம் : மயிர்க்கூச்சு. ஆர்ந்த..' நிறைந்திருந்த மேனி-தம்முடைய திருமேனிக் கு. ப்:சந்தி. புறம்பு-வெளியிடங்களில்: ஒருமை பன்மை மயக்கம். அலைப்ப-நீர் அலைகளைப் போல வழிய. அன்பு-பக்தியி: னால், கரைந்து என்பு-தம்முடைய திருமேனியில் உள்ள எலும்புகளுக்கு: ஒருமை பன்மை மயக்கம். உள்-உள்ளே சென்று. அலைப்ப-அலைபாயச் செய்ய சேர்ந்த-தம்மிடம் சேர்ந்துள்ள. நயனப்பயன்-திருவுள்ளத்தில் திருவிழிகளால் பெற்ற பிரயோசனத்தை. பெற்று-அந்த நாயனார். அடைந்து. த்:சந்தி, திளைப்ப-இன்பத்தை அடையுமாறு. த்:சந்தி. திருவேகம்பர்தமை-அழகிய ஏகாம்பரேசுவரரை. நேர்ந்த-தம்மிடம் சேர்ந்துள்ள. மனத்தில்-திருவுள்ளத்தில். உறவைத்து-ஏகாம்பரேசுவரரைப் பதியுமாறு வைத்துக் கொண்டு. நீடும்-நெடுங்காலமாக விளங்கும், பதிகம். ஒரு திருப்பதிகத்தை பாடுவார்-அந்த நாயனார் பாடியருளு, பவரானார். பிறகு வரும் 324-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: "அந்தத் திருநாவுக்கரசு நாயனார். *"கர வாடும் வன்ைெஞ்சர்க் கரியானை' என்று தொடங்கி அந்த ஏகாம் பரேசுவரரைப் புகழ்தல் ஆகிய இனிய சுவையைப் பெற்ற செய்யுட் சொற்களைக் கொண்ட மாலையாகிய ஒரு திருப் பதிகத்தை அந்த நாயனார் பாடியருளிய பிறகு பகைவர் களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை எரித்தருளியவரும், இடப வாகனத்தை. ஒட்டுபவரும், வெண்மையான பற்களைப் பெற்ற பாம்புக. ளாகிய மாலைகளை அணிந்தவரும் ஆகிய ஏகாம்பரேசுவர: