பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 23. நடைய திருக்கோயிலுக்குள் இருக்கும் அழகிய முற்றத்தினு. டைய வெளிப் பக்கத்தை அந்த நாயனாரி அடைந்தார்." 1ாடல் வருமாறு: - " " கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை' என்றெடுத்துப் பரவாய சொல்மாலைத் திருப்பதிகம் பாடியபின் விரவார்தம் புரம் எரித்த விடையவனார் வெள்ளெயிற்றின் அரவாரம் புனைந்தவர்தம் திருமுன்றிற் புறத்தணைந்தார்.' கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை' என்று. கரவா டும் வன்னெஞ்சர்க் கரியானை' என. எடுத்து-அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் தொடங்கி, ப்:சந்தி, பரவு-அந்த ரகாம்பரேசுவரரைப் புகழ்தல்:முதல் நிலைத்தொழிற்பெயர். ஆய-ஆகிய சொல்-இனிய சுவையைப் பெற்ற செய்யுட் சொற்களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். மாலை. மாலையாகிய, த்:சந்தி. திருப்பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. பாடிய-அந்த நாயனார் பாடியருளிய பின் பிறகு, விரவார் தம்.பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் ான்னும் மூன்று அசுரர்களுசகு உரிய ஒருமை பன்மை மயக் கம். தம்: அசைநிலை. புரம்- பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை; ஒருமை பன்மை மயக்கம் எரித்த-எரித் தருளியவரும்; வினையாலணையும் பெயர். விடையவனார். இடப வாகனத்தை ஒட்டுபவரும் வினையாலணையும்பெயர். வெண்-வெண்மையாகிய, எயிற்றின்-பற்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். அரவு-பாம்புகளாகிய ஒருமை' பன்மை மயக்கம். ஆரம்-மாலைகளை ஒருமை பன்மை மயக் ாம். புனைந்தவர் தம்-அணிந்தவருமாகிய ஏகாம்பரேசுவர்ரு டைய, தம்: அசைநிலை. திருமுன்றில்-திருக் கோயிலுக்கு