பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 25 மயானத்தில் உள்ள மயானேசுவரர் திருக்கோயிலை அந்த நாயனார் வலமாக வந்து உண்மையாகிய பேராவல் உண் டாக அந்த மயானேசுவரரை வணங்கி விட்டு விருப்பத் தோடு காஞ்சீபுரத்தில் அந்த நாயனார் தங்கிக் கொண்டிருக் கும் காலத்தில். பாடல் வருமாறு: கையார்ந்த திருத்தொண்டு கழியமிகும் காதலொடும் செய்யாதின் றேஎல்லாச் செந்தமிழ்மா லையும்பாடி மையார்ந்த மிடற்றர்திரு மயானத்தை வலம்கொண்டு மெய்யார்வம் உறத்தொழுது விருப்பினொடு மேவும்நாள்.' இந்தப் பாடல் குளகம். கை-அந்தத் திருநாவுக்கரக நாயனார் தம்முடைய திருக்கரங்களால்: ஒருமை பன்மை மயக்கம். ஆர்ந்த-அமைந்த. திருத்தொண்டு-உழவாரத் திருத் தொண்டினையும் வேறுபல திருத் தொண்டுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். கழிய-அதிகமாக. மிகும்-மிக்கு வளரும். காதலொடும்-விருப்பத்தோடும். செய்யா நின்றே. புரிந்து கொண்டே. எல்லாச் செந்தமிழ்-எல்லாச் செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலையும்-மாலையாகிய ஒரு திருப் பதிகத்தையும். பாடி-அந்த நாயனார் பாடியருளி மை-மை யைப் போல. ஆர்ந்த-கரிய நிறம் அமைந்த, மிடற்றர்-திருக் கழுத்தைப் பெற்றவராகிய, திருமயானத்தை-கச்சித்திருமயா னத்தில் உள்ள மயானேசுவரர் திருக்கோயிலை; இட ஆகு பெயர். வலம் கொண்டு-அந்த நாயனார் வலமாக வந்து, மெய்-உண்மையாகிய, ஆர்வம்-பேராவல். உற-உண்டாக, த்:சந்தி. தொழுது-அந்த மயானேசுவரரை வணங்கி விட்டு. ఎgు 3Gan டு-விருப்பத்தோடு, மேவும்-காஞ்சீபுரத்தில் அந்த நாயனார் தங்கிக் கொண்டிருக்கும். நாள்-காலத்தில் . 蔓