பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 27 வர் தாம்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சிவபெருமானார். தாம்: அசை நிலை. நிலவி -எழுந்தருளி. உறை-சிவபெருமானார் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் - திருக்கோயில்களுக்கு | அந்த நாயனார் எழுந்தருளி. ஆர்வம்-பேராவல். உற-இமக்கு உண்டாக, ப்:சந்தி. பணிந்து.திருமேற்றளி நாதரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டு. ஏத்தி-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. ஆயந்த-தாம் ஆராய்ந்து அமைத் த. தமிழ்-செந் தமிழ் மொழியில் அமைந்த. ச்:சந்தி, சொல்-செய்யுட் சொற் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். மலரால்-மலர்களால் : .ஒருமை பன்மை மயக்கம். சார்வுறு-அமைதியைப் பெற்றி. மாலைக்ள்-மாலைகளாகிய பல திருப்பதிகங்களை. சாத்திஅந்தத் திருமேற்றளி நாதருக்கு அணிந்து விட்டு. த்:சந்தி. திருத்தொண்டு-தமக்கு ஏற்றவையாகிய உழவாரத் திருதி தொண்டினையும் வேறு பல திருத் தொண்டுகளையும்: ஒரு மை பன்மை மயக்கம். செய்து-புரிந்து கொண்டு. இருந் .தார்-அந்த நாயனார் காஞ்சீபுரத்தில் தங்கிக் கொண்டு இருந்தார். திருமேற்றளி: இது காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திருக் கோயில். இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் திருமேற்றளி நாதர். அம் :பிகை காமாட்சிஅம்மை, தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம். இந்தத் திருக் கோயில் காஞ்சீ புரத்திற்கு மேற்குத் திசையில் உள்ள :பகுதியாகிய பிள்ளைப்பாளையத்தில் உள்ளது. திருமால் சிவ காரூபத்தை அடையும் பொருட்டுத் தவத்தைப் புரிந்து கொண்டிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடி யருளிய ஒரு திருப்பதிகத்தால் சிவ பத்தைப் பெற்ற தலம் இது. இங்கே இரண்டு சந்தி கள் உள்ளன. ஒன்று ஒதவுரு கீசர் சந்நிதி. அந்த ஈசர் திருமாலினுடைய உருவத்தோடு இருந்தவர். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியரு