பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - பெரிய புராண விளக்கம்-8. ளிய ஒரு பாசுரத்தால் சிவலிங்கப் பெருமானுடைய திருவுரு வமாய் உருகினார். மற்றொன்று திருமேற்றளி ஈசுவரர் சந்நிதி. இந்தக் கோயில் உள்ள தெருவின் முனையில் திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருக்கோயில். உள்ளது. அதற்கு அருகில் அவர் பாடியருளிய பாசுரத்தை. உற்றுக் கேட்டருளிய முத்தீசுவரருடைய திருக் கோயில் உள்ளது. திருக்கச்சி மேற்றளியைப் பற்றித் திருநாவுக்கரக நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: 'விண்ணிடை விண்ண வர்கள் விரும்பி வந்திறைஞ்சி வாழ்த்தப் பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடக் கேட்பார் கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சிமா நகர்தன் னுள் ளால் என்னிைடை எழுத்தும் ஆனார் இலங்குமேற் றளிய னாரே. இந்தத் திருப்பதிகத்தில் இறுதியில் வரும் திருநேரிசை வருமாறு: தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள் இன்னவற் கருளிச் செய்தார். இலங்குமேற் றளிய னாரே. ’’ இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: நிலையாய் நின் னடியே நினைந்தேன் நினைதலுமே