பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 29> தலைவா நின்னிணையப் பணித்தாய் கலமொழிந்தேன் சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளிஉறையும் மலையே உன்னையல்லால் - மகிழ்ந்தேத்த மாட்டேனே. ' பிறகு வரும் 327-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தக் காஞ்சி' மாநகரத்தில் அவ்வண்ணம் வீற்றிருந்து தங்கிக் கொண்டிருக் கும் காலத்தில் புகழோடு நிலைபெற்று விளங்கும் திருமாற். பேற்றுக்கு எழுந்தருளி வந்து அடைந்து மணிகண்டேசு வரரை வண்ங்கி விட்டுச் செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருளித் தம்முடைய தலையின் மேல் பிறைச் சந்திரனை அணிந்தவராகிய சிவ பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். தலங்கள் பலவற்றிற்கும் எழுந்தருளி அந்தத் தலங்களில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டுக் காஞ்சி மாநகரத்தைத் தம்முடைய திருவுள்ளத்தில் தொடர்ச்சியாக வந்துள்ள பெரியதாக இருக்கும் விருப்பத் தோடு அடைந்து அந்தக் காஞ்சீபுரத்தை அந்த நாயனார். அடைந்தார். பாடல் வருமாறு: ' அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்துறையும் நாளின்கண் மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச் சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவும் சென்றிறைஞ்சித் துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெரும் காதலினால்.’