பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£30 பெரிய புராண விளக்கம்-8 அந்நகரில்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தக் காஞ்சி மாநகரத்தில், அவ்வண்ணம்-அவ்வாறு. அமர்ந்து. வீற்றிருந்து. உறையும்-தங்கிக் கொண்டிருக்கும். நாளின் கண்-காலத்தில். மன்னு-புகழோடு நிலை பெற்று விளங்கும். திருமாற்பேறு-திருமாற்பேற்றுக்கு. வந்து- எழுந்தருளி வந்து. அணைந்து-அடைந்து. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. பாடி-ஒரு திருபபதிகத்தை அந்த நாயனார் பாடி, யருளி. ச்: சந்தி. சென்னிமிசை-தம்முடைய தலையின் மேல். மதி-பிறைச் சந்திரனை, புனைவார்.அணிந்தவராகிய சிவ பெருமானார். பதி-எழுந்தருளியிருக்கும் தலங்கள்; ஒருமை :பன்மைமயக்கம்.பலவும்-பலவற்றிற்கும்.சென்று-எழுந்தருளி. இறைஞ்சி-அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டு. த்:சந்தி, காஞ்சியினை-காஞ்சி மாநகரத்தை. த்:சந்தி. தொடர்ந்ததம்முடைய திருவுள்ளத்தில் தொடர்ச்சியாக வந்துள்ள. பெரும்-பெருகி எழும். காதலினால். விருப்பத்தோடு; .உருபு மயக்கம், துன்னினார். அடைந்தார். திருமாற்பேறு: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய .திருநாமங்கள் மால்வணங்கீசுவரர், மணிகண்டேசுவரர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் கருணை நாயகி அஞ்சனாட்சி அம்மை என்பவை. இது பாலாற்றங் கரையில் உள்ளது. இந்தத் தலம் காஞ்சீபுரத்திலிருந்து வடக்கே பளுர் என்னும் ஊர் வகையிலும் சென்று அங்கிருந்து தென் மேற்குத் திசையில் 2 மைல் தூரம் "சென்றால் அந்த இடத்தில் உள்ளது. வடமொழியில் இந்தச் சிவத்தலத்திற்கு ஹரிச்சக்ரபுரம்' என்று பெயர். குபன் என் .ணும் மன்னனுக்காகத் திருமால் ததிசி முனிவரோடு போர் புரியத் தம்முடைய சக்கராயுதம் அந்த முனி வருடையவஜ்ரத் தைப்போன்ற திருமேனியில்பட்டு தன்னுடைய வாய் மடிந்து விட்டமையால் வேறு ஒரு சக்கராயுதத்தைப் பெற எண்ணி,