பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரிய புரா ன விளக்கம்-இ வாமபாசத்தில் . பெண்-பெண்ணாகிய காமாட்சி அம்மை யினுடைய உருவானை -திருவுருவத்தைப் பெற்றவனை. ப்:சந்தி. பைம்-பசுமையாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். விடை-இடபத்தை. உயர்த்தானை-உயர்த்திப் பிடித்த அந்த ஏகாம்பரேசு , வரனை. நாகம்-பாம்புகளை; ஒருமை பன்மை மயக்கம், பூண்-அணிகலன்களாக, ஒருமை பன்மை மயக்கம். உகந், தானை-மகிழ்ந்து அணிந்து கொண்ட அந்த ஈசுவரனை. நலம்.அழகு, பெருகும்-பெருகி எழும். திருநீற்றின்-வியூ தியை. இன் வேண்டாவழி வந்த சாரியை. ஆகம்-தன்னு: டைய திருமேனி முழுவதும். தோய்-பூசிக்கொண்ட அணி யானை-அழகைப் பெற்ற அந்த ஈசுவரனை. அணைந்து-. அடைந்து. பணிந்து-வணங்கிவிட்டு. இன்புற்றார்-ஆனந், தத்தை அடைந்தார். - 'ஏகம்பன் கா ண் அவ ன் எ ன் எண்ணத்தானே என்ற சொற்றொடர் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய இரண்டு திருப்பதிகங்களில் உள்ள திருத் தாண் டகங்களில் வருகின்றன. அவற்றுள் ஒரு திருப்பதிகத்தில்: வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு: கூற்றுவன் காண் கூற்றுவனைக் குமைத்த கோன் காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண் காற்றவன்காண் கன லவன்காண் கலிக்கும் மின் காண். கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன்காண் நிலாவூரும் சென்னி யான்காண் நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்சடைமேல் ஏற்றவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே, ’’ மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - .