பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இரு நாவுக்கரசு நாயனார் புராணம் - 35.9%

  • நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால்

இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக் கூசன்சான் கூசாதார் நெஞ்சு தஞ்சே : குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை. வாசன் காண் மலைமங்கை பங்கன் தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் ஈசன்காண் ஈழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே. ’’ அடுத்து வரும் 329-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருக்கச்சி ஏகம்ப. மாகிய காஞ்சீபுரத்தில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளில் யிருக்கும் ஏகாம்பரேசுவரரை வணங்கித் துதித்துவிட்டு: நெருக்கத்தைப் பெற்ற தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் பிறைச் சந்திரனை அணிந்தவராகிய சிவ பெருமானார் நெடுங்காலமாகத் திருக்கோயில் கொண்டு. எழுந்தருளியிருக்கும் சிவத்தலங்களுக்கு எழுந்தருளி அந்தத் தலங்களில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களை வணங்குவதற்கு எண்ணுவாராகி பலாப் பழங்களில் உள்ள சிவப்பாக இருக்கும் சுளைகள் சொரியும் தேன் பாய்ந்து வயல்களில் பயிர்களை விளையச் செய்யும் தொண்டை நாட்டுக்கு அந்த நாயனார் எழுந்தருளி பருத்தலைப் பெற்ற உறுதியாகிய துதிக்கையைக் கொண்ட ஆண்யானையை உரித்த தோலைப் போர்த்துக் கொண்டவராகிய வேத . கிரீசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கழுக்குன்றத்தினுடைய பக்கத்தை அந்த நாயனார் . அடைந்தார். பாடல் வருமாறு: " திருக்கச்சி ஏகம்பம் பணிந்தேத்தித் திங்களார் நெருக்கச்செஞ் சடைக்கணிந்தார் டுேபதி தொழநினைவார்.