பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பேரிய புராண விளக்கம்-8 ஒரு திருப்பதிகத்தை அந்த வேதகிரீசுவரருக்கு அணிந்து விட்டு அந்தச் சிவத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள பல சிவத்தலங்களிலும் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் தம்முடைய தலையில் அணியும் இளமைப் பருவத் தைப் பெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியைப் பெற்ற சிவபெருமான்களை வணங்கி வாழ்த்திவிட்டு மேலே எழுந்தருளி தன்னுடைய பக்கத்தில் பெரியதாக இருக்கும் சமுத்திரத்தைச் சுற்றிப் பெற்ற திருவான்மியூரின் பக்கத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: டுேதிருக் கழுக்குன்றில் கிருத்தனார் கழல்வணங்கிப் பாடுதமிழ்த் தொடைபுனைந்து பாங்குபல பதிகளிலும் சூடும் இளம் பிறைமுடியார் தமைத்தொழுது போற்றிப்போய் மாடுபெரும் கடலுடுத்த வான்மியூர் மருங்கணைந்தார். ' நீடு-நெடுங்காலமாகப் புகழ்பெற்று விளங்கும், திருக் கழுக்குன்றில்-திருக்கழுக்குன்றத் தில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளி யிருக்கும். நிருத்தனார்-திரு நடனம் புரிந் தருளுபவராகிய வேதகிரீசுவரருடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகு பெயர். வணங்கி-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பணிந்து விட்டு. ப்:சந்தி. பாடு-தாம் பாடியருளும். தமிழ்செந்தமிழ் மொழியில் அமைந்த, த்:சந்தி. தொடைமாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. புனைந்து-அந்த தேவ கிரீசுவரருக்கு அணிந்து விட்டு. பாங்கு-அந்தத் திருக் கழுக்குன்றத்திற்குப் பக்கத்தில் உள்ள. பல பதிகளிலும். பல சிவத்தலங்களிலும், குடும்-அணியும், இளம்பிறைஇளமைப் பருவத்தைப் பெற்ற பிறைச் சந்திரனை. முடி யார் தமை. அணிந்து கொண்டிருக்கும் திரு முடியைப் பெற்ற