பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரிய புராண விளக்கம் திருவான்மியூர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திரு வான்மியூரில். மருந்தை-திருக்கோயில் கொண்டு எழுந்: தருளியிருக்கும் மருந்தீசரை திணைமயக்கம். ச்:சந்தி. சேர்ந்து-அடைந்து. பணிந்து-அந்த மருந்தீசரை வணங்கி விட்டு. அன்பினொடும்-பக்தியோடும். பெரு-பெருமையைப் பெற்ற வாய்மை-உண்மைகளை எடுத்துரைக்கும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை; ஆகுபெயர் பாடி-அந்த நாயனார் பாடியருளி. அம்மருங்கு-அந்தப் பக்கத்தில் உள்ள பிறப்பு-இந்த மானிடப் பிறவியை. அறுத்துத் தருவார்-போக்கித் தந்தருளுபவராகிய சிவபெருமானார். தம்: அசைநிலை, கோயில் பல-பல ஆலயங்களுக்கு அந்த நாயனார். கோயில்: ஒருமை பன்மை மயக்கம். சார்ந்துஎழுந்தருளி. இறைஞ்சி-அந்தத் தலங்களில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டு. த்:சந்தி: தமிழ்-செந்தமிழ் மொழிக்கு. வேந்தர்-அரசராகிய அந்தத் திருந்ாவுக்கரசு நாயனார். மரு-நறுமணம். ஆரும்-நிறைந் திருக்கும். மலர்-மலர்கள் மலர்ந்துள்ள பல வகையான மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த மரங்களாவன: தேக்குமரம், வேங்கைமரம், வாகைமரம், வேப்ப மரம், மகிழமரம், கடப்பமரம், பூவரச மரம், பவள மல்லிகை மரம், வில்வமரம், மாமரம், நெல்லி மரம், நாவல் மரம், சுரபுன்னைமரம், புலி நகக்கொன்றை மரம், சரக் கொன்றை மரம், ஞாழல்மரம், நுண்ாமரம், நெட்டிலிங்க மரம், அசோக மரம், விளா மரம் முதலியவை. ச்: சந்தி. சோலை-பூம்மொழில் சூழ்ந்த, மயிலாப்பூர்-திருமயிலா புரிக்கு. வந்து-அந்த நாயனார் எழுந்தருளி. அடைந்தார். சேர்ந்தார். - х திருவான்மியூர்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் மருந்தீசர். அம்பிகை சொக்க நாயகி. இது சைதாப் பேட்டைக்குத் தென்கிழக்குத் திசையில் 4-மைல் தூரத்தில்