பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 4叙 வளர்-வளரும். மாலைகள்.மாவைகளாகிய பல திருப்பதிகங். களை. அணிவித்து-அந்தக் கபாலீசுவரர் அணியுமாறு: புரிந்து. உழவாரப் படையாளி-உழவாரப் படையை ஆளு. கிறவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். திரை-அலை கள்: ஒருமை பன்மை மயக்கம். வளர்-வளர்ந்து வீசும். வேலை-சமுத்திரத்தினுடைய. க்:சந்தி. கசை-கரையின் வழியாக. போய்-எழுந்தருளி. த்:சந்தி. திருவொற்றியூர்திருவொற்றியூரை. சேர்ந்தார்-அந்த நாயனார் அடைந். தார். திருமயிலாப்பூர்: இது தொண்டை நாட்டில் சென்னை யில் ஒரு பகுதியாகக் கடற்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் கபாலீசுவரர். அம்பிகை. யின் திருநாமங்கள் கற்பகாம்பிகை, கற்பக வல்லி அம்மை என்பவை. தீர்த்தம் கபாலி தீர்த்தம் என்னும் திருக்குளம். தலவிருட்சம் புன்னைமரம். இது கற்பகாம்பிகை மயிலின் வடிவத்தை எடுத்துக்கொண்டு கபாலீசுவரரைப் பூசித்த தலம். வாயிலார் நாயனாருடைய திருவவதாரத் தலம் இது. சிவநேசச் செட்டியார் என்பவருடைய புதல்வி பாம்பு கடித்து இறந்து போக அவளை அந்தச் செட்டியாா தகனம், செய்துவிட்டு அவளுடைய எலும்புகளையும் சாம்பலையும். ஒரு குடத்தில் சேர்த்து வைத்திருந்தார். திருஞானசம்பந்த, மூர்த்தி நாயனார் மயிலாப்பூருக்கு எழுந்தருளியபோது. இந்தச் செய்தியை அறிந்து பூம்பா வைத் திருப்பதிகத்தைப் பாடியருளி அந்தப் பெண் னை மீட்டும உயிர் பெறச் செய். தருளிய தலம் இது, திருவள்ளுவர் எழுந்தருளியிருந்த, தலமும் இதுவே என்பர். அவருக்கு ஒரு திருக்கோயில் இங்கே உள்ளது. இந்த ஆலயம் மேற்குப் பார்த்த சுவாமி சந்நிதியை.. உடையது. கோயிற் பிராகாரத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவுருவமும், பூம்பாவையினு: டைய வடிவமும் உள்ளன. கபாலி தீர்த்தம் என்னும் திருக்க