பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 49. இந்தத் தலத்தைப்பற்றித் திருநாவுக்கரசு நாயனார் திரு நேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை, திருத் தாண்டகம் என்பவை அடங்கிய திருப்பதிகங்களைப் பாடி பேருளியிருக்கிறார். அவற்றுள் ஒரு திரு நேரிசை வருமாறு: வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மேய்தரு ஞானத் தீயால் கள்ளத்தைக் கழிக நின்றார் காயத்துக் கலந்து நின்று உள்ளத்துள் ஒளியு மாகும் ஒற்றியூ ருடைய கோவே. ' மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருநேரிசை வருமாறு: " ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் காம்பிலா மூழை போலக் : கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனே ஒம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே. ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவி ருத்தம் வரு மாறு: " சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கில் தொண்ட ரடைந்தார் அல்லற் படக்கண்டு பின்னென - கொடுத்தி சுவைகொள் முந்நீர் மல்லற் றிரைச்சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே