பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 பெரிய புராண விளக்கம்-இ. ஒல்லைத் திரை கொணர் தெற்றொற்றி பூருளை உத்த மனே." அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: ... . . கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின் ஆற்றுத் தண்டத் தடக்கும் அரனடி நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம் ஊற்றுத் தண்டொப்பர் போவொற்றி பூரரே. ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: கடிய விடையேறி காள கண்டர் கலையோடு மழுவாளோர் கையில் ஏந்தி இடிய பலிகொள்ளார் போவார் அல்லர் எல்லாந்தான் இவ்வடிகள் யாரென் பாரே வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயிலாப் புள்ளே கெடிபடுவெண் தலையொன் றேந்தி வந்து திருவொற்றி யூர்புக்காந் தீய வாறே. ' இந்தத் தலத்தைப் பற்றித் தக்கேசிப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு:

  • கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே

கட்டி யே பலர்க்கும் களை கண்ணே அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல - வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி ஒங்கு மாகடல் ஒதம்வந் துலவும் ஒற்றியூ ரெனும் ஊர் உறை வானே. ’’ அந்த நாயனார் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு காசுரம் வருமாறு: