பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.52 . பெரிய புராண விளக்கம்-8 அத்திருவொற்றியூர்-அந்தத் திருவொற்றியூரில். அமர்ந்தவிற்றிருந்தருளிய. பெரு-பெருமையைப் பெற்ற. நாக-மேரு மலையாகிய, த்:சந்தி, திண்-உறுதியாகிய, சிலையார். வில்லை ஏந்தியவராகிய ஆதிபுரீசுவரருடைய. கோபுரத்தைதிருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுர வாசலில் நின்று கொண்டு; உருபு மயக்கம். இறைஞ்சிஅந்த ஆதிபுரீசுவரரை அந்த நாயனார் வணங்கிவிட்டு. ப்:சந்தி. புக்கு-திருக்கோயிலுக்குள் நுழைந்து. ஒரு-ஒப் பற்ற. ஞான-சிவஞானத்தைப் பெற்ற தொண்டருடன்திருத் தொண்டர்களோடு; ஒருமை பன்மை மயக்கம்.உருகி. தம்முடைய திருவுள்ளத்தில் பக்தியினால் உருக்கத்தை அடைந்து. வலம்கொண்டு-அந்த ஆலயத்தை வலமாக வந்து. அடியார்-தம்முடைய அடியவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். கரு-ஒரு தாயினுடைய கருப்பத்தில் புகும். நாமம்-அச்சத்தை. தவிர்ப்பாரை-போக்கியருளுபவ ராகிய அந்த ஆதி புரீசுவரரை. க்:சந்தி, கை-தம்முடைய திருக்கரங்களை ஒருமை பன்மை மயக்கம், தொழுது-தம் முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டு மீண்டும் அந்த ஈசுவரரை வணங்கி. முன்-அவருடைய சந்நிதியில் வீழ்ந்தார்-தரையில் விழுந்தார். பிறகு வரும் 335-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் ஏட்டில் எழுதாத நான்கு வேதங்களையும் வழங்கியருளிய எழுத்தறியும் பெரு மானாராகிய அந்த ஆதிபுரீசுவரரை அந்த நாயனார் வணங்கிவிட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் பேராவல் உண்டாகத் தரையில் விழுந்து அந்த ஆதிபுரீசுவரரை கொண்டு தம்முடைய திருமேனியில் உள்ள உறுப்புக்கள் எல்லாவற்றிலும் முழுதுமாகிய பக்தி பரவசத்தினால் அரும் பிய மயிர்க்கால்களில் தாம் முழுகுமாறு தரையில் விழும் தம் முடைய விழிகளிலிருந்து தாரை தாரையாக நீரைச் சொரிய