பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 53 நடு க்கத்தை அடைந்து விம்மி விம்மி அழுதார்.” பாடல் வரு மாறு: " எழுதாத மறை அளித்த எழுத்தறியும் பெருமானைத் தொழு தார்வம் உறங்லத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம் முழு தாய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால்மூழ்க விழு தாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்.” - எழுதாத-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் ஏட்டில் எழுதாத. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை ஆயும்; ஒருமை பன்மை மயக்கம். அளித்த- வழங்கியருளிய. எழுத்தறியும் பெருமானை-எழுத்தறியும் பெருமானாராகிய அந்த ஆதிபுரீசுவரரை: ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தொழுது-அந்த நாயனார் வணங்கிவிட்டு. ஆர்வம்-பேரா வல். உற-உண்டாக, நிலத்தில்-தரையில், தோய்ந்துவிழுந்து அந்த ஆதிபுரீசுவரரை வணங்கிவிட்டு. எழுந்துவிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு. ஏ:அசை நிலை. அங்கம்-தம்முடைய திருமேனியில் உள்ள உறுப்புக் கள்; ஒருமை :ன்மை மயக்கம். எலாம்-எல்லாவற்றிலும்; இடைக்குறை. முழுதாய-முழுதுமாகிய, பரவசத்தின்-பக்தி பரவசத்தினால் முகிழ்த்த-அரும்புகளைப் போல அரும்பிய. மயிர்க்கால்-மயிர்க் கால்களில்: ஒருமை பன்மை மயக்கம். மூழ்க-முழுகுமாறு. விழு-தரையில் விழும். தாரை-தாரை யாக வழியும் நீரை: ஆகுபெயர். கண் தம்முடைய கண்கள்; ஒருமை பன்மை மயக்கம். பொழிய.சொரிய. விதிர்ப்பு உற்று-நடுக்கத்தை அடைந்து. விம்மினார்-அந்த நாயனார் விம்மி அழுதார். எழுதாதமறை-வேதத்திற்கு எழுதாக் கிளவி என்று பெயர் வழங்கும். தி-4