பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரிய புராண விளக்கம்-8 அடுத்து வரும் 336-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருதாவுக்கரசு நாயனார், வண்டோங்கு." செங்கமலம்' என்று தொடங்கித் தம்முடைய திருவுள்ளம். பக்தியினால் உருக்கத்தை அடைய உரிய பண் அமைந்த. இனிய சுவையைப் பெற்ற செய்யுட் சொற்கள் அடங்கிய ஒரு திருத்தாண்டகத்தை அந்த நாயனார் பாடியருளி அந்த ஆதி புரீசுவரரைப் புகழ்பவராகி ஆகாயத்திலிருந்து இறங்கிய நீர் ஓடும் கங்கையாற்றைத் தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் தங்க வைத்தவராகிய அந்த ஆதிபுரீசுவரருடைய திருவுருவததை அந்த நாயனார் தரிசித்துத் தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்து ஓங்கும் ஆனந்தம் சிறப்பாக அமையத் தம்முடைய கைகளைத் தம் முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பி அந்த ஈசுவரரைக் கும்பிட்டு விட்டுத் திருக்கோயிலுக்கு வெளியில் உள்ள இடத்தை அடைந்தார். பாடல் வருமாறு: . " வண்டோங்கும் செங்கமலம்' எனஎடுத்து மனமுருகப் பண்தோய்ந்த சொற்றிருத்தாண் டகம்பாடிப் பரவுவார் விண்தோய்ந்த புனற்கங்கை வேனியார் திருவுருவம் கண்டோங்கு களிசிறப்பக் கைதொழுது புறத்தணைந்தார். ' வண்டோங்கும் செங்கமலம்’ என-அந்தத் திருநாவுக் கரசு நாயனார் வண்டோங்கும் செங்கமலம்' என்று:இடைக் குறை. எடுத்து-தொடங்கி. மனம்-தம்முடைய திருவுள்ளம். உருக-பக்தியினால் உருக்கத்தை அடைய. ப்:சந்தி. பண். உரிய பண், தோய்ந்த-அமைந்த. சொல்.செய்யுட் சொற்கள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். திருத்தாண்டகம்-ஒரு அருத்தாண்டகத்தை. பாடி-அந்த நாயனார் பாடியருளி .