பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 55 ப்:சந்தி. பரவுவார்-அந்த ஆதிபுரீசுவரரைப் புகழ்பவராகி; முற்றெச்சம். விண்-ஆகாயத்திலிருந்து. தோய்ந்த-இறங்கி வந்து விழுந்த, புனல்-நீர் ஓடும். கங்கை-கங்கையாற்றை. வேணியார்-தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத் தில் தங்க வைத்தவராகிய அந்த ஆதிபுரீசுவரருடைய. திருஅழகிய. உருவம்-திருவுருவத்தை. கண்டு-அந்த நாயனார் தரிசித்து. ஓங்கு-தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்து ஓங்கும். களி-ஆனந்தம். சிறப்ப-சிறப்பாக அமைய. க்:சந்தி. கை-தம்முடைய கரங்களை ஒருமை பன்மை மயக்கம். தொழுது-தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பி அந்த ஈசுவரரைக் கும்பிட்டு விட்டு, புறத்து. அந்தத் திருக்கோயிலுக்கு வெளியில் உள்ள ஓரிடத்தை. அணைந்' தார்.அந்த நாயனார் அடைந்தார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருத்தாண்டகம் வரு மாறு: வண்டோங்கும் செங்கமலக் கழுநீர் மலரும் மதமத்தம் சேர்சடைமேல் மதியம் சூடித் திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடிச் சிவலோகனார் உண்டார் நஞ் சுலகுக்கோர் உறு தி வேண்டி ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார் கண்டேன்நான் கனங்கத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணியும் சுடும்தொழிலும் கைவிட்டவே." இந்தத் திருப்பதிகத் தில் உள்ள இறுதித் திருத்தாண் கடகம் வருமாறு: - மருவுற்ற மலர்க்குழலி மடவாள் அஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச் செறுவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத் திருவடியின் விரலொன் றால் அலற ஊன்றி