பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரிய புராண விளக்கம்-8 உருவொற்றி அங்கிருவர் ஒடிக் காண ஓங்கிவைவ் வொள்ளழலார் இங்கே வந்து திருவொற்றி யூர் நம்மூர் என்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே." அடுத்து வரும் 337-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் புகழ் பெற்றுத் திகழும் பெருமையைப் பெற்றிருக்கும் ஆதிபுரீசுவரருடைய திருக்கோயிலில் உள்ள அழகிய முற்றத்தில் தமக்கு அமைந்த உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும் புரிந்து கொண்டே தம்முடைய திருவுள்ளத்தில் பாடியரு ளும் விருப்பத்தைப் பெற்ற பல திருவிருத்தங்களையும், தம் முடைய திருவுள்ளத்தில் ஓங்கி எழுந்த பல திருக்குறுந் தொகைகளையும் அந்த ஆதிபுரீசுவரருடைய ஆலயத்தைப் பற்றித் தம்முடைய திருவுள்ளமாகிய இடத்தில் மேற் கொண்ட பல திரு நேரிசைகளையும் அந்த நாயனார் பாடி யருளித் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்த ஆதிபுரீசுவரரை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு செல்வ வளத்தைப் பெற்ற அழகிய சிவத்தலமாகிய அந்தத் திருவொற்றியூரில் பல தினங்கள் தங்கிக் கொண்டிருந்தார். பாடல் வருமாறு: " விளங்குபெருங் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே உளங்கொள்திரு விருத்தங்கள் ஓங்குதிருக் குறுந்தொகைகள் களங்கொள்திரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது வளங்கொள்திருப் பதியதனில் பலநாள்கள் வைகினார். ’’