பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 57 விளங்கு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் புகழ் பெற்றுத் திகழும். பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். திருமுன்றில்-ஆதிபுரீசுவரருடைய திருக்கோயிலில் உள்ள அழகிய முற்றத்தில், முன்றில்-இல் முன்; பின் முன்னாகத் தொக்க தொகை. மேவு-தாம் விரும்பிய. திருப்பணி-உழ வாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும்: ஒருமை பன்மை மயக்கம். செய்தே-புரிந்துகொண்டே. உளம்தம்முடைய திருவுள்ளத்தில், கொள்-பாடியருளும் விருப்பத் தைப் பெற்ற. திருவிருத்தங்கள்-பலதிருவிருத்தங்களையும். ஓங்கு-தம்முடைய திருவுள்ளத்தில் ஓங்கி எழுந்த. திருக் குறுந்தொகைகள்-பல திருக்குறுந்தொகைகளையும். களம்அந்த ஆதிபுரீசுவரருடைய ஆலயத்தைப் பற்றித் தம் முடைய திருவுள்ளமாகிய இடத்தில். கொள்-மேற் கொண்ட திருநேரிசைகள் பல-பல திருநேரிசைகளையும். பாடி-அந்த நாயனார் பாடியருளி. க்:சந்தி. கை-தம்முடைய திருக்கரங்களை; ஒருமை பன்மை மயக்கம். தொழுது-தம் முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. வளம் -செல்வ வளத்தை. கொள்-பெற்ற, திருப்பதி-அழகிய சிவத் தலமாகிய, அதனில்-அந்தத் திருவொற்றியூரில், பல நாள்கள் -பல தினங்கள். வைகினார்-அந்த நாயனார் தங்கிக் கொண்டிருந்தார். இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்காக நாயனாரி பாடியருளிய சில திருவிருத்தங்கள் வருமாறு: புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கைஎன்னும் சிற்றிடை யாட்கும் செறிதரு கண்ணிக்கும் சேர்விடமாம்