பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பெரிய புராண விளக்கம்-8 கும் சிவபெருமான்களை இனிமையோடு வணங்கி விட்டுத். துதிக்கும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் இறைவன் வழங்கிய திருவருளால் பொங்கி எழும் நீர் நிரம்பிய குளம். குட்டை, கடல், ஆறு, வாவி, கிணறு முதலிய நீர் நிலை களைப் பெற்ற திருவொற்றியூருக்கு மீண்டும் அந்த நாயர் னார் எழுந்தருளி அந்த ஆதிபுரீசுவரரை வணங்கி விட்டு மேலே எழுந்தருளி உமையாளாகிய பசுபதி நாயகி அம்மை. யைத் தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய்த பாசூர் நாதேசுவரர் வீற்றிருந்த திருப்பாசூராகும் சிவத் தலத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு:

  • அங்குறையும் காளின்கண்

அருகுளவாம் சிவாலயங்கள் எங்கும்சென் றினிதிறைஞ்சி ஏத்தும்அவர் இறைஅருளால் பொங்குபுனல் திருவொற்றி யூர்தொழுது போந்துமையாள் பங்குடையார் அமர்ந்ததிருப் பாசூராம் பதிஅணைந்தார்.' அங்கு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தத் திரு. வொற்றியூரில். உறையும்-தங்கிக் கொண்டிருக்கும். நாளின் கண்-காலத்தில். அருகு-அந்தத் திருவொற்றியூருக்குப் பக்கத். தில். உளவாம்-இருப்பவையாகும். உள:இடைக்குறை. சிவால. யங்கள்-சிவபெருமானுடைய திருக்கோயில்களாகிய. எங்கும் -எல்லா இடங்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். சென்று" அந்த நாயனார் எழுந்தருளி. இனிது-இனிமையோடு, இறைஞ்சி-அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுற். தருவியிருக்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு. ஏத்தும் அந்தச் சிவபெருமான்களைத் துதிக்கும். அவர்-அந்தத் திரு. நாவுக்கரசு நாயனார். இறை-இறைவனாகிய திருவதிகை விரட்டானேசுவரன். அருளால்-வழங்கிய திருவருளினால்,