பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 6盘° பொங்கு-பொங்கி எழும். புனல்-நீர் நிரம்பிய குளம், குட்டை, கடல், ஏரி, ஆறு, வாவி, கிணறு முதலிய நீர் நிலைகளைப் பெற்ற; ஆகு பெயர். திருவொற்றியூர்திருவொற்றியூருக்கு மீண்டும் அந்த நாயனார் எழுந்தருளி. தொழுது-அந்த ஆதி புரீசுவரரை வணங்கி விட்டு. போந்துமேலே எழுந்தருளி. உமையாள்-உமையவளாகிய பசுபதி அம்மையை. பங்கு-தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச்' செய்த, உடையார்-செயலைப் பெற்றவராகிய பாசூர் நாதேசுவரர். அமர்ந்த-வீற்றிருந்த திருப்பாசூர் ஆம் -திருப்பாசூராகும். பதி-சிவத்தலத்தை. அணைந்தார்" அந்த நாயனார் அடைந்தார். திருப்பாசூர்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பாசூர் நாதேசு வரர். அம்பிகை பசுபதி நாயகி அம்மை. இது திருவெவ் வுளுருக்கு மேற்குத் திசையில் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. பாசூர் நாதேசுவரர் ஒரு மூங்கில் மரத்தின் அடியில் தோன்றியருளிய தலம் இது. சமணர்கள் கரிகால் வளவனுக்க குப் பகைவனாக இருந்த ஒரு குறும்ப அரசனுக்கு உதவியாக ஒருகுடத்தில் விட்டு அந்தக் கரிகால் வளவனிடம் அனுப்பின பெரிய பாம்பை அந்தக் கரிகால் வளவனுக்கு உதவியாகப் பாசூர் நாதேசுவரர் அந்தப் பாம்பை எடுத்து ஆட்டியருளிய தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு. பாசுரம் வருமாறு: " சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் - போழ்தென் மனத்துள்ளார்