பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

st 2 பெரிய புராண விளக்கம்-8 மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர்போலும் பைந்தன் மாதவி சோலை சூழ்ந்த பாகுரே.' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். எபாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: " மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர் படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே.' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: " வின்னாகி நிலனாகி விசும்பு மாதி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி ஏழுலகும் தொழுதேத்திக் காண நின்ற கன்னாகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பன்னாகி இன்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாேந." பிறகு வரும் 339-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருப்பாசூரி என்னும் பெரிய சிவத்தலத்தை அடைந்து தம்முடைய திருவுள்ளத் தில் வந்து ஊற்றைப் போலக் சுரக்கும் விருப்பமும் பேரா வலும் தம்மிடம் உண்டாக மூங்கிலை தாம் எழுந்தருளியிருக் கும் இடமாக மேற்கொண்டு இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் எழுந்தருளி விருப்பவராகிய பாசூர்நாதேசுவரரை, தம்முடைய பகைவர்: