பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 63. களாகிய தாரகாட்சன், வித் யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை எரித்தருளும் பொருட்டுத் தம்முடைய திருக்கரத்தில் எடுத்துக் கொண்ட ஒப்பற்ற மேரு மலையாக அமைந்த கொடுமையாக இருக்கும் வில்லை ஏந்தியவராகிய அந்தப் பாசூர் நாதேசுவரரை அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அந்த ஈசுவரரை வாழ்த்துவாரானார்." :பாடல் வருமாறு: " திருப்பாசூர் நகர்எய்திச் சிந்தையினில் வந்துறும் விருப்பார்வம் மேற்கொள்ள வேயிடம்கொண் இலகுய்ய இருப்பாரைப் புரம்மூன்றும் எரித்தருள எடுத்ததனிப் பொருப்பார்வெஞ் சிலையாரைத் தொழுதெழுந்து போற்றுவார்.' திருப்பாசூர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருப் :பாகுர் என்னும், நகர்-பெரிய சிவத்தலத்தை. எய்திஅடைந்து, ச்:சந்தி. சிந்தையினில்- தம்முடைய திருவுள் களத்தில். வந்து ஊறும்-தோன்றி ஊற்றைப்போலச் சுரக்கும். விருப்பு-விருப்பமும், ஆர்வம்-பேராவலும். மேற்கொள்ள. தம்மிடம் உண்டாக. வேய்-ஒரு மூங்கில் மரத்தை. இடம். தாம் எழுந்தருளியிருக்கும் இடமாக. கொண்டு-மேற் கொண்டு. உலகு- இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: இடஆகு பெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண் னம். இருப்பாரை - எழுந்தருளியிருப்பவராகிய பாசூர் தாதேசுவரரை. ப்:சந்தி. புரம் மூன்றும்-தம்முடைய Aபகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன்