பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 65 இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் திருக்கிறது. வாகீசர்-அந்த வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். முந்திமூ வெயிலெய்த முதல்வனார்' என'முந்தி மூவெயிலெய்த முதல்வனார்' என்று. என:இடைக் குறை. எடுத்து-தொடங்கி, ச்:சந்தி. சிந்தை-தம்முடைய திருவுள்ளம். கரைந்து-மெழுகைப் போலக் கரைந்து. உருகுஉருக்கத்தை அடைந்து பாடியருளும், திருக்குறுந்தொகை யும்.ஒரு திருக்குறுந்தொகையும். தாண்டகமும்-ஒரு திருத் தாண்டகமும். சந்தம்.செய்யுட் சந்தம். நிறை-நிறைந்தல் நேரிசையும்-ஒரு திரு நேரிசையும். முதலான-முதலாக உள்ள. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த பாசுரங் களை ஆகுபெயர். பாடி-அந்த நாயனார் பாடியருளி. எந்தையார்-அடியேங்களுடைய தந்தையாராகிய அந்தப் பாசூர் நாதேசுவரர். அடியேங்கள் என்றது சேக்கிழார் தம்மையும் பிற திருத் தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. திருவருள்-வழங்கிய திருவருளை. பெற்று-பெற். றுக் கொண்டு. ஏகுவார்-மேலே எழுந்தருளுபவரானார். அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடி யருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: முந்தி மூவெயில் எய்த முதல்வனார் சிந்திப் பார்வினை தீர்த்திடும் செல்வனார் அந்திக் கோன் தனக் கேயருள் செய்தவர் பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே. 3 * இந்தத் திருக்குறுந்தொகை மேலே உள்ள பாடலில் குறிப்பிடப் பெற்றது. இந்தத் தலத்தைப்பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத் தாண்டகம் வருமாறு: நீராரும் செஞ்சடைமேல் அரவம் கொன்றை நிறைமதிய முடன்சூடி நீதி யாலே