பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 67;” "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த மலர்ச்சியையும் சீர்த்தியையும் பெற்று விளங்கும் அந்தச் சிவத்தலமாகிய திருப்பாசூரை விட்டுவிட்டு அந்தத் தலத்திற்குப் பக்கத்தில்: இருப்பவையாகும் சிவத்தலங்கள் எல்லாவற்றிற்கும் அந்த, நாயனார் எழுந்தருளி மையைப் போன்ற கரிய நிறம் மலர்ச் சியைப் பெற்றுத் திகழும் திருக்கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமானாரைப் பணிந்து விட்டு மகிழ்ச்சியோடும் அந்த பெருமானாரை வாழ்த்தி விட்டு உண்மையென்னும் நிலை யிலிருந்தும் தவறாத வேளாளர்களாகிய மேலாக விளங்கும் குடித்தனப் பாங்கையுடைய செம்மையினால் சிறப்பைப் பெற்ற பழையனூர் என்னும் ஊரைத் தன் பால் பெற்ற: திருவாலங்காட்டுக்கு அந்த நாயனார் எழுந்தருளி ஊர்த்துவ: தாண்டவேசுவரரை வணங்கினார். பாடல் வருமாறு: " அம்மலர்ச்சீர்ப் பதியைஅகன் றயல்உளவாம் பதிஅனைத்தின் மைம்மலரும் களத்தாரை வணங்கிமகிழ் வொடும்போற்றி மெய்ம்மைநிலை வழுவாத வேளாள விழுக்குடிமைச் செம்மையினாற் பழையனூர்த் திருஆல வனம்பணிந்தார்.” அம்மலர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த மலர்ச் இயையும். மலர்: முதனிலைத் தொழிற் பெயர். ச்:சந்தி. சீர். சர்த்தியையும் பெற்று விளங்கும். ப், சந்தி. பதியை-சிவத்தல மாகிய திருப்பாகுரை. அகன்று-விட்டு விட்டு. அயல்-அந்தச் சிவத்தலத்திற்குப் பக்கத்தில். உளவாம்-இருப்பவையாகும். உன: இடைக்குறை. பதி-சிவத்தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அனைத்தின்-எல்லாவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி. மை-மையைப் போன்ற கரிய நிறம்: ஆகு டெயர். ம்:சந்தி. மலரும்-மலர்ச்சியைப் பெற்றுத் திகழும்.