பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் - புராணம் பாகம் - 3 பெரிய புராணத்தில் 5-வது ஆக விளங்கும் திருகின்ற சருக்கத்தில் மு. த ல | வ தா. க இருக்கும் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில், 318-ஆம் பாடலின் கருத்து வருமாறு : . இந்த உலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் திருவதிகை வீரட்டானத்தில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பராகிய வீரட் .டானேசுவரர் தாம்வழங்கிய பெரிய திருவருளால் சூலையை - அளித்து முன் ஒரு காலத்தில் ஆளாகக் கொண்டருளிய திருத் தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனார் நம்முடைய திருத்தலமாகிய காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளும் பாக்கி யத்தை அடைந்தோம்.’’ என எண்ணிக் காலை நேரத்தில் மலர்ச்சியை அடையும் தாமரை மலர்களைப் போல காஞ்சீ புரத்தில் வாழும் மக்களுடைய வதனங்கள் யாவும் மிகவும் மலர்ச்சியை அடைந்து மகிழ்ச்சி சிறந்து ஓங்கி நிற்க ஆனந் தம் தழைத்து ஓங்கிய திருவுள்ளங்களைத் தாங்குபவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு : " "ஞாலம் உய்யத் திருவதிகை கம்பர் தம்பேர் அருளினால் சூலை மடுத்து முன்ஆண்ட தொண்டர் வரப்பெற் றோம்’ என்று