பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 . பெரிய புராண விளக்கம்-ஐ களத்தாரை-திருக்கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமா னாரை. வணங்கி-அந்த நாயனார் பணிந்து விட்டு. மகிழ் வொடும்-மகிழ்ச்சியோடும். போற்றி-அந்தப் பெருமானாரை வாழ்த்தி விட்டு. மெய்ம்மை-உண்மைகளைப் பேசுகின்ற: ; ஒருமை பன்மை மயக்கம்;நிலை-நிலையிலிருந்தும். வழுவாத- - தவறாத வேளாள.வேளாளர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். விழு-மேலாக விளங்கும். க்:சந்தி. குடிமை-குடித் தனப் பாங்கையுடைய. ச்:சந்தி. செம்மையினால்-செம்மை யினால் சிறப்பைப் பெற்ற, செம்மை-நேர்மை. பழையனுர்ர்பழையனூர் என்னும் ஊரைத் தன்பாற் பெற்ற. திருஆல வனம்-திருவாலங் காட்டுக்கு அந்த நாயனார் எழுந்தருளி. . . பணிந்தார்-ஊர்த்துவதாண்டவேசுவரரை வணங்கினார். திருவாலங்காடு: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திரு நாமங்கள் தேவர் சிங்கப் பெருமான், ஊர்த்துவ தாண்ட வேசுவரர் என்பவை. அம்பிகை வண்டார்குழலி அம்மை. தீர்த்தம் முக்தி தீர்த்தம். தலவிருட்சம் பலா மரம். சென்னைக்கு 37 மைல் தூரத்தில் உள்ள திருவாலங் *ாட்டுக்கு வடகிழக்குத் திசையில் 3 மைல் துாரத்தில் பழைய னுார் உள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றாகிய இரத்தின சபை இந்தத் தலத்தில் உள்ளது. ஊர்த்துவ தாண்டவேசுவரர் காளியோடு திருநடனம் புரிந்து அருளிய தலம் இது. இந்தச் செய்தி திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திரு. நேரிசையால் விளங்கும். அந்தத் திரு நேரிசை வருமாறு: : கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடம் கொண்டு சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழளை மேயார்