பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 69 ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே.” காரைக்கால் அம்மையார் கைலாச மலையிலிருந்து தலையாலே நடந்து வந்து ஊர்த்துவதாண்டவேசுவரரைத் தரிசித்து அந்த ஈசுவரருடைய எடுத்த பொற்பாதத்தின் கீழ்ச் சிவானந்தத்தைத் துய்த்துக் கொண்டிருக்கும் தலம் இது. ஒரு செட்டிப் பிள்ளை இந்தப் பழையனூருக்கு வந்த போது நீலி என்னும் ஒரு பெண் பேய் ஒரு கரிக் கட்டையைக் குழந்தையாக்கி எடுத்துக் கொண்டு அந்தச்சேட்டிப் பிள்ளை யைத் தோடர்ந்து சென்று, 'இந்தக் குழந்தையை வாங்கிக் கோள்' என்றாள். அந்தச் செட்டிப் பிள்ளை வந்தவள் ஒரு பேய் மகள் என்பதை அறிந்து அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டான். நீலி என்ற அந்தப் பேய் மகள் பழையனூரில் வாழ்ந்த எழுபது வேளாளர்களிடம் சென்று, என் கணவன் இந்தக் குழந்தையை வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று கூறுகிறான். நீங்கள் தயை செய்து எப்படியாவது அவனை என்னோடு கூட்டி வைக்க ஒவண்டும்' என்றாள். அந்த வேளாளர்கள் அந்தச் செட்டிப் பிள்ளையை அணுகி, "உன்னுடைய மனைவியையும் குழந் தையையும் ஏன் புறக்கணித்து விட்டாய்?’ என்று கேட்டார் கள்.அவன், ஐயோ. அவள் ஒரு பெண் பேய். அவள் என்னு டைய மனைவி அல்ல. அவள் கையில் உள்ள குழந்தை உன் மையான குழந்தை அல்ல. ஒரு கரிக்கட்டையைக் குழந்தை யாக மாற்றிவைத்துக் கொண்டிருக்கிறாள்' என்றான். அந்த வேளாள்ர்கள், "நீ அந்தப் பெண்ணுடன் சேர்ந்து இருக்கத் தான் வேண்டும்' என்றார்கள். அவன் "ஐயோ, என்னை அவளுடன் சேர்த்துஓர் அறைக்குள் விடாதீர்கள்.அப்படி விடி டால் இரவில் அவள் என்னைத் தின்று விடுவாள்' என்றான். அந்த வேளாளர்கள். 'அப்படி இருக்குமானால் நாங்கள் தி-5