பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரிய புராண விளக்கம்-8 எங்கள உயிர்களை விட்டு விடுவோம். இந்த உத்தர வாதத்தை நீ ஏற்றுக் கொண்டு அவளோடு இந்த அறையில்: இன்று இரவைக் கழிப்பாயாக' என்றார்கள். அவன் அவர் கள் சொல்லைத் தட்ட முடியாமல் அந்த நீலி என்னும்: பெண் பேயோடு அந்த அறையில் புகுந்து தங்கினான். அன்று: இரவில் அந்தப் பெண் பேய் அந்தச் செட்டிப் பிள்ளையைத். தின்று விட்டு மறைந்து போனாள். மறுநாள் அந்த: எழுபது வேளாளர்களும் அறையைத் திறந்து பார்க்க வ்ெறும் எலும்புக் குவியலைத்தான் கண்டார்கள். அந்த நீலி பெண் பேய் என்பதும் அவள் அந்தச் செட்டிப் பிள்ளையைத் தின்று விட்டாள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தன. உடனே தாங்கள் கொடுத்த வாக்கின்படி அந்த எழுபது வேளாளர்களும் தீச் குளித்துத் தங்களுடைய உயிர்களை விட்டு: விட்டார்கள். இதைத் தான் இந்தப் பாடலில், மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் செம்மையால்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வேளாளர்களின் பரம்பரையில வந்த வேளாளர்கள் வாழும் பழையனூர் இந்தத் திருவாலங்காடடிற்குக் கிழக்குத் திசையில் ஒரு. மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலும் ஒரு சிவாலயம் உண்டு. இந்த நீலியின் வரலாற்றை நீலிகதை என்ற பழைய உரை நடை நூலில் காணலாம். இந்த வரலாற்றைத் திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குறிப்பிட்டுப் பாடியருளிய, ஒரு பாசுரம் வருமாறு: o " துஞ்ச வருவாரும் தொழுவிப் பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாருமுனை நட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாண்ாள் கொள்ளும் வகைகேட் 1.ஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. ’’