பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 71. இந்தத் தலத்தைப் பற்றித் தக்கராகப் பண்ணில் திரு ஞானசம் பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: பறையும் சிறுகுழலும் யாழும் - பூதம் பயிற்றவே மறையும் பலபாடி மயானத் துறையும் மைந்தனார் பிறையும் பெரும்புனல் சேர்சடையி னாரும் பேடைவண் டறையும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. '" இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திரு நேரிசை வருமாறு: தாருடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும் நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே. ' இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிக் கெளவாணப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய ருளிய ஒரு காகரம் வருமாறு: முத்தா முத்தி தர வல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா சித்தா சித்தித் திறம்காட்டும் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னுார்மேய