பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 73 எடுத்துக் கூறும் தொடுத்தலைப் பெற்ற மாலைகளாகிய பல திருப்பதிகங்களை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி விட்டு வேறு சிவத்தலங்களுக்கும் அந்த நாயனார் எழுந்தருளும் பேராவல் உண்டாக அந்தச் சிவத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான்களைப் பணிந்து விட்டு வடக்குத் திசையின் மேலாக உள்ள வழியில் அந்த நாயனார் எழுந்தருளுபவ ரானார். பாடல் வருமாறு: திருவாலங் காடுறையுஞ் செல்வர்தா மெனச்சிறப்பின் ஒருவாத பெருந்திருத்தாண் டகமுதலா வோங்குதமிழ்ப் பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியும் மருவார்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார்.' திருவாலங்காடுறையும் செல்வர்தாம்’ என-திருவாலங் காடுறையும் செல்வர் தாம் என்று. என: இடைக்குறை. சி:சந்தி. சிறப்பின்-சிறப்பிலிருந்து. ஒருவாத-நீங்காத, பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். திருத்தாண்டகம் முதலாம்-திருத்தாண்டகம் முதலாக இருக்கும். ஒங்கு-சொற் சுவை, பொருட் சுவை என்னும் இரண்டு சுவைகளும் ஓங்கி விளங்கும். தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, ப்: சந்தி, பெரு-பெரிய. வாய்மை-உண்மைகளை எடுத்துக் கூறும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தொடை-தொடுத்தலைப் பெற்ற. மாலை-மாலைகளாகிய ஒருமை பன்மை மயக்கம், பல-பல திருப்பதிகங்களை. பாடி-அந்தத் திருநாவுக்கரசு கரசு நாயனார் பாடியருளி விட்டு. ப்:சந்தி. பிற-வேறு. பதியும்-சிவத்தலங்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம், மருவு-அந்த நாயனார் எழுந்தருளும். ஆர்வம்-பேராவல்.