பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - பெரிய புராண விளக்கம்-8 பெற-உண்டாக. வணங்கி. அந்தச் சிவத்தலங்களில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் களைப் பணிந்து விட்டு. வடதிசை மேல்-வடக்குத் திசையில் மேலாக, வழிக் கொள்வார்.உள்ள வழியில் அந்த நாயனார் எழுந்தருளுபவரானார். திருவாலங்காட்டைப் பற்றித் திருநாவுக்கரசு நாய னார் பாடியருளிய ஒவ்வொரு திருத்தாண்டகமும், 'திரு. வாலங்காடுறையும் செல் வர்தா மே.’’ என்று முடிகிறது. திரு திருத்தாண்டகம் வருமாறு: ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே ஊழி தோறுாழி உயர்ந்தார் தாமே நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ ஆகாசம் ஆனார் தாமே கொன்றாடும் கூற்றை உதைத்தார் தாமே சோலப் பழனை உடையார் தாமே சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திருவாலங் காடுறையும் செல்வர் தாமே.” மற்றொரு திருத்தாண்டகம் வருமாறு: - மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே வண்கயிலை மாமலையை வந்தி யாத நீலக் கடல்சூழ் இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே பாலொத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே சிலத்தார். ஏந்தும் திறத்தார் தாமே திருவாலங் காடுறையும் செல்வர் தாமே." பிறகு வரும் 343-ஆம் கவியின் கருத்து வருமாறு: பல சிவத்தலங்களையும் உயரமாக நிற்கும் மலையை யும் பல வகையான கொடிகள் படர்ந்து ஒடும் காட்டையும் தாம் கடந்து மேலே எழுந்தருளி அடையவராகி தம்முடைய