பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 75 பக்தர்களுக்குச் செல்லும் நல்ல சிவ கதியை முன்னால் வழங்கியருள்பவராகிய சிவபெருமாவார் எழுந்தருளியிருக் கும் திருக்காரிகரைக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி அந்தச் சிவத்தலத்தில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானா ைவணங்கி விட்டு பழையவையாகிய அறுபத்து நான்கு கலைகளில் வல்லே கிய அந்தப் பெருமையைப் பெற்ற அரசராகிய திருதாவு அரசு நாயனார் திருத்தொண்டர்களுக்குப் பின் தேவர்களினுடைய கூட்டம் நிரம்பியிருக்கும் '. - பெற்ற திருக்காளத்தி மலைக்கு எழுந்தருளி வந்து சேர்த் தார். பாடல் வருமாறு: " பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றடைவார் செல்கதிமுன் அளிப்பார்தம் திருக்காரி கரைபணிந்து தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர்குழாம் மல் குதிருக் காளத்தி மாமலைவங் தெய்தினார்." பல்-பல, பதியும்.சிவத்தலங்களுக்கும். நெடும்-உயரமாக ஆதிற்கும். கிரியும்-மலைக்கும். படர்-பல வகையான கொடிகள் :படர்ந்து ஒடும்; அந்தக் கொடிகள் ஆவன: முல்லைக்கொடி, மல்லிகைக் கொடி, இருவாட்சிக் கொடி, ஊணான் கொடி, செந்தாமரைக் கொடி, வெண்டாமரைக் கொடி, அல்லிக் கொடி, ஆம்பற்கொடி, நீலோற்பலக்கொடி முதலியவை. வனமும்-காட்டுக்கும். சென்று. எழுந்தருளி. அடைவார்சேர்பவராகி; முற்றெச்சம். செல்கதிமுன்-தம்முடைய பக்தே களுக்குச் செல்லும் சிவகதியை முன்னால், அளிப்பார்தம்வழங்கியருள்பவராகிய சிவபெருமானார். தம்: அசை நிலை. திருக்காரிகரை-எழுந்தருளியிருக்கும் திருக்காரி கரைக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. பணிந்து