பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 77's தம்முடைய கண்ணை இடந்து அப்பிய கண்ணப்ப நாயனார். ஆறு தினங்களில் முக்தியை அடைந்தார். காளத்தியப்ப ரைப் பூசித்து வந்த சிவகோசரியார் என்னும் அந்தணரும் இந்தத் தலத்திலேயே முக்தியை அடைந்தார். தேவர்களும் காளத்திநாதரை வழிபட்டுப் பேறு பெற்றார்கள். நக்கீரதேவ. நாயனாரும் காளத்திநாதரை வழிப்படும் வேறு பெற்றார். இந்தச் சிவத்தலம் தட்சிண கைலாசங்களில் ஒன்று என்பர். " சிலந்தி மாகண மும்மதக் கரிசிவ கோசன் மலைந்தி டும்சிலை வேட்டுவன் கீரனே மடவார் பலந்த ரும்வழி பாட்டினாற் பாட்டினாற் பரனைக் கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையுங்: கண்டான்." என்று கந்தபுராணத்தில் வருவதைக் காண்க. இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு. பாசுரம் வருமாறு:

  • சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்

உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே." அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு : வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு - தாரகனை நீடி. கோல்லென விடுத்தருள் புரிந்தசிவன் -- மேவுமலை கூறிவினவில், பல்பல இருங்கனி பருங்கிமிக உண்டவை - நெருங்கியினமாய்க். கல்ல திர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்தி மலையே." இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனாரி' பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு :